நாய்களை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 249 வருடங்கள் சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2024

நாய்களை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 249 வருடங்கள் சிறைத் தண்டனை

அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அதாவது 52 வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன்.

இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா (Paraphilia) என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புணர்வு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் படம்பிடித்துள்ளார்.

மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக அவுஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment