பங்களாதேஷ் மாணவர் ஆர்ப்பாட்டம் : போராட்டங்களில் இதுவரை 105 பேர் பலி : நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 20, 2024

பங்களாதேஷ் மாணவர் ஆர்ப்பாட்டம் : போராட்டங்களில் இதுவரை 105 பேர் பலி : நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக அங்குள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பல்கலைக்கழங்களில் கல்வி பயிலும் சுமார் 50 இலங்கை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் உள்ளதாகவும், அவர்கள் எவருக்கும் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள இலங்கை மாணவர்கள் தமது விடுதிகளிலேயே தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களை தமது சொந்த நாட்டிற்கு செல்லுமாறு பங்களாதேஷ் அரசாங்கம் இதுவரை எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை. இதனால் இலங்கை மாணவர்கள் தமது விடுதிகளிலேயே தங்கியுள்ளதாக அங்கள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வேலை ஒதுக்கீட்டு முறையை மாற்றக் கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தமது போராட்டங்களைத் தொடரவுள்ளதாகத் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment