இலங்கைக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் : நாட்டை வந்தடைந்த வீர, வீராங்கனைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 17, 2024

இலங்கைக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் : நாட்டை வந்தடைந்த வீர, வீராங்கனைகள்

3ஆவது தடவையாக நடைபெற்ற Asian Throwing Championships 2024 போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுமார் 20 ஆசிய நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி தென்கொரியாவின் மோக்போ நகரில் கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 வயதான ருமேஷ் தரங்க 85.45 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இலங்கை சாதனையையும் போட்டி சாதனையையும் முறியடித்தார்.

இந்த எறிதல் தூரம் ஒலிம்பிக் சாதனையை விட 5 செ.மீ குறைவாக இருந்தது, இதன் மூலம் ருமேஷ் தரங்கா உலக தரவரிசையில் 9ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இராணுவத்தின் தில்ஹானி மற்றும் சுமேதா ரணசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

No comments:

Post a Comment