ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (7) காலை மாத்திரம் 32 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிற்பகலில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் என்சின் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 ரயில் நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சார ரயில் இயங்காது எனவும் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேனாநாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment