ருமேனியாவுக்கு அனுப்புவதாக ஒரு கோடி 30 இலட்சம் ரூபா மோசடி : 53 பேர் பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 16, 2024

ருமேனியாவுக்கு அனுப்புவதாக ஒரு கோடி 30 இலட்சம் ரூபா மோசடி : 53 பேர் பொலிஸில் முறைப்பாடு

ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக்கூறி பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக்கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும், அதன்படி ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment