தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 17, 2024

தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழப்பு

கண்டி, கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் தேங்காய் தலையில் வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாத பெண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின்போது, குழந்தையின் தந்தை குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு அயல் வீட்டிற்குச் சென்று மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீட்டிற்கு முன்னால் உள்ள 30 அடி உயர தென்னை மரமொன்றிலிருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்த குழந்தை தெல்தோட்டை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் உடல் நிலை மிகவும் பலவீனமாகக் காணப்படுவதால் குழந்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வசிக்கும் வரிசை வீடுகளுக்கு அருகாமையில் உள்ள தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் பாதுகாப்பற்ற முறையில் தரையில் விழுந்து கிடப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீடுகளில் சிறுவர்கள் மற்றும் பலர் இருந்தபோதும் இங்குள்ள அபாயம் தொடர்பில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment