துண்டுதுண்டாக உடைக்க நான் தயார், தமிழ் தலைவர்கள் தயாரா? - கேள்வி எழுப்பினார் ஹரீஸ் MP - News View

About Us

About Us

Breaking

Saturday, May 18, 2024

துண்டுதுண்டாக உடைக்க நான் தயார், தமிழ் தலைவர்கள் தயாரா? - கேள்வி எழுப்பினார் ஹரீஸ் MP

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனையை துண்டுதுண்டாக உடைப்பதற்கு நான் தயார். இன ஐக்கியத்திற்காக, சமாதானத்திற்காக கல்முனை மக்களின் அபிவித்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பினார்.

கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது, நான் பயமின்றி குறிப்பிடுகின்றேன் உலகமே நிற்கின்றது நாடு பிரியக்கூடாது என்று, ஆனால் நான் இந்த நகரத்தின் மக்கள் தலைவன் சொல்லுகின்றேன், கல்முனையை நாங்கள் பிரிப்போம். இதற்கு தைரியம் உள்ள தமிழ் தலைவர்கள் முன்வரட்டும்.

கொழும்பு மாநகரம் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற வெள்ளவத்தை மற்றும் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களை வைத்து அங்குள்ள மாநகரத்தை தமிழர்களுக்காக பிரித்துக் கொடுப்பதற்கு ஆக குறைந்தது ஒரு முகநூல் பதிவை ஏனும் இவர்களால் போட முடியுமா?

கல்முனையில் உள்ள விஷேட அம்சம் என்னவென்றால் நான்கு சமூகங்கள் இருக்கின்றது. அவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

எனவேதான் தமிழ் இளைஞர்கள், புத்திஜீவிகள் நாங்கள் இணைந்து இந்த மக்களுக்காக ஒற்றுமையாய் பயணிக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டி இருக்கின்றது அதற்கான அழைப்பை நான் விடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment