அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் : எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2024

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் : எதிர்க்கட்சித் தலைவர்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.

“ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன எமது ஆட்சியில் நிறுவப்படும்.

தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை, இந்த நாட்டின் 76 வருட கால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளோம், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும், 76 வருட வரலாற்றைப் பற்றி பேசும் இந்நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும், 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை அழித்தவர்களுடன் தமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை, அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளையோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ தனக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும், தானும் தனது குழுவும் எப்பொழுதும் மக்களுக்காவே கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை, நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும், போதைப் பொருள் கலாச்சாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளதாகவும் கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் நாட்டின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு விசேட நிதியம் ஸ்தாபிக்கப்படும் என்றும், 76 வருட காலம் குறித்து பேசும் போது நாம் பெருமடைகிறோம்.எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பணியை ஐக்கிய மக்கள் ஆற்றயுள்ளது என்றார்.

No comments:

Post a Comment