இலங்கையில் ஒன்றிணையும் Dialog மற்றும் Airtel : உறுதியான ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, April 18, 2024

இலங்கையில் ஒன்றிணையும் Dialog மற்றும் Airtel : உறுதியான ஒப்பந்தம் கைச்சாத்து

Dialog மற்றும் Airtel நிறுவனங்கள் இன்று தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்தன.

டயலொக் ஆக்ஸியாட்டா பிஎல்சி (Dialog Axiata plc), டயலொக் ஆக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel)ஆகியவை இலங்கையில் தமது செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் இன்று (18) கைச்சாத்திட்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் பார்தி ஏர்டெல்லின் முழு பங்கு வெளியீட்டையும் டயலொக் கையகப்படுத்தும்.

அதற்கு பதிலாக டயலொக்கின் (Dialog) 10.355% வாக்குரிமையுடன் கூடிய சாதாரண பங்குகள் பார்தி ஏர்டெல்லுக்கு (Bharti Airtel) வழங்கப்படும்.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு, டயலொக் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் அனுமதி மற்றும் பிற ஒழுங்குமுறை செயல்முறைகள் மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நாட்டில் தொலைத்தொடர்பு துறையின் முன்னேற்றத்திற்கான அதன் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க இரண்டு நிறுவனங்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக டயலொக் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment