தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 10 வருடங்களாக தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
12 வருடங்களுக்கும் மேலாக பாவனையிலுள்ள பழைய வாகனங்களையே பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்து.
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற்கொள்ளப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஹெஷான் சேமசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment