ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை ஊழல் வழக்கொன்றிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று(30) உத்தரவிட்டார்.

அமைச்சராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் முறையற்ற விதத்தில் ஈட்டிய 274 இலட்சம் ரூபா பணத்தினூடாக பொரளை கின்சி வீதியில் அதிசொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டாளரான வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் முறைப்பாட்டின் சாட்சியாளர்களாக அழைக்கப்படவில்லை எனவும் பிரதிவாதியால் வீட்டைக் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளதாக நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர்கள் தரப்பு தவறியுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவின் போது குறிப்பிட்டார்.

அதற்கமைய குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரபராதி என கருதி அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment