எந்தவொரு கட்சிக்கும் பஸ் வழங்கப்பட மாட்டாது - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

எந்தவொரு கட்சிக்கும் பஸ் வழங்கப்பட மாட்டாது - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

மே தினக் கூட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தாமல் பஸ்களை வழங்க வேண்டாம் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பணம் செலுத்தாமல் எந்தவொரு கட்சிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மே தினக் கூட்டத்துக்காக வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் பணத்தைச் செலுத்திய பின்னர் பஸ்ஸினை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment