ஏழைகளின் காவலன் பாலித்த தேவரப்பெரும காலமானார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 16, 2024

ஏழைகளின் காவலன் பாலித்த தேவரப்பெரும காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) உயிரிழந்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி பிறந்த இவர், தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட எம்.பியாக (2010 - 2020) பதவி வகித்ததோடு, உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் (06 April 2016 – 01 May 2018), வனஜீவராசிகள் பிரதி அமைச்சராகவும் (1 May 2018 – 19 November 2019) பதவி வகித்துள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிவதில் முன்னிற்பவர் எனும் பெயர் கொண்ட பாலித்த தேவரப்பெரும பல்வேறு பொதுமக்கள் சார்ந்த விடயங்களுக்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதும் மக்கள் மனதில் அவர் இடம்பிடிக்க காரணமாக அமைந்த விடயமாகும்.

அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

இந்நிலையில், அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.












No comments:

Post a Comment