ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ பரவல் ! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 24, 2024

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ பரவல் !

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஆடை வர்த்தகக் கட்டிடத்தில் பாரிய தீப் பரவல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பதிவாகியுள்ளது.

வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள நோலிமிட் எனும் ஆடை விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கடைக்குள் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

அதேவேளை, தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment