புதிதாக மதஸ்தலங்களை நிறுவ புதிய விதிமுறைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, March 22, 2024

புதிதாக மதஸ்தலங்களை நிறுவ புதிய விதிமுறைகள்

நாட்டில் புதி­தாக பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய மதஸ்­தலங்கள் நிறு­வப்­ப­டு­வ­தற்கு புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு புதிய சில விதி­மு­றை­களை கொண்டுவந்­துள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லைகள், கோவில்கள், ஆலயங்கள் புதி­தாக நிர்­மா­ணிப்­ப­டு­வ­தாயின் புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் அனு­ம­தி­யினைப் பெற்றுக்­ கொள்ள வேண்டும்.

இவ்­வா­றான அனு­மதி பள்­ளி­வா­சல்கள் உட்­பட மதஸ்­தா­ப­னங்கள் புதி­தாக நிறு­வப்­படும் பிர­தே­சத்தின் கிராம சேவை­யாளர் மற்றும் பிரதேச செய­லா­ளரின் சிபா­ரி­சு­க­ளுடன் புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ரி­ட­மி­ருந்து அனுமதியைப் பெற்­றுக்­ கொள்ள வேண்­டு­மெனத் தெரிவிக்கப்பட்டுள்­ளது.

புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸ­லிடம் வின­வி­ய­போது, புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மாணம் தொடர்பில் விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனத் தெரி­வித்தார்.

இதே­வேளை நாட்டில் இது­வரை காலம் திணைக்­க­ளத்தில் பதிவு செய்யப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்கள் கட்டம் கட்­ட­மாக பதிவு செய்யப்ப­டு­கின்­றன.

திணைக்­க­ளத்­துக்கு பதி­வுக்­காக கிடைக்­கப்­ பெற்­றுள்ள விண்ணப்பங்கள் வக்பு சபை மற்றும் திணைக்­க­ளத்­தினால் ஆராயப்பட்டு உரிய ஆவ­ணங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருப்பின் பதிவுகள் இடம்­பெற்று வரு­கின்­றன எனவும் அவர் தெரிவித்தார்.

Vidivelli

No comments:

Post a Comment