பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பொலிஸ் ராஜியத்தையே உருவாக்கப் போகின்றது : அமுல்படுத்த சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றத்தில் ஹக்கீம் வாதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2024

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பொலிஸ் ராஜியத்தையே உருவாக்கப் போகின்றது : அமுல்படுத்த சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றத்தில் ஹக்கீம் வாதம்

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மா­னது நாட்டில் பொலிஸ் ராஜியத்தையே உரு­வாக்கும் என அச்சம் வெளி­யிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்ட மூலம் அர­சி­ய­ல­மைப்­புக்கு முற்­றிலும் முர­ணாக இருப்­பதால், அதனை சட்டமாக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்­மை­யோடு, சர்­வ­சன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என வலியு­றுத்­தினார்.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­லத்தை (Anti Terrorist bill) கேள்விக்குட்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் கட்சியின் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர் தாக்கல் செய்­தி­ருந்த SD.SC.No.27.24 இலக்க சிறப்பு நிர்­ணய மனு(Special Determination Application) நேற்­று­முன்­தினம், உயர் நீதி­மன்­றத்தில் ஆதரிப்பதற்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே, முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வாதங்­களை முன்வைத்தார்.

பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மையில் ஐவர் அடங்­கிய நீதிய­ரசர் குழாம் முன்­னி­லையில் இந்த வழக்கு விசா­ரணை இடம்பெற்­றது.

இதன்­போது, இந்த உத்­தேச சட்­ட­மூலம் ஒரு பொலிஸ் ராஜி­யத்­தையே உரு­வாக்கப் போகின்­றது. அத­னூ­டாக பயங்­க­ரமும், பயமுறுத்தல்களும், இளை­ஞர்­களை அணி திரள வைப்­பது போன்றவையும் நிகழும் அபாயம் இருக்­கின்­றது. எங்­க­ளுக்கு வயது முதி­ரும்­போது, சட்­டங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து கட்­டுக்­கோப்­போடு வாழக்­கூ­டிய, நற்­பி­ர­ஜை­களை உரு­வாக்க கூடிய விதத்தில் ஓர் அடிச்சு­வட்டை விட்டுச் செல்ல வேண்டும்.

இன்று சர்­வ­தேச சமூ­கத்தை பொறுத்­த­வரை “பயங்­க­ர­வாதம்” என்பதற்கு வித்­தி­யா­ச­மான வரை­வி­லக்­க­ணங்கள் காணப்படுகின்றது.

அவ்­வப்­போது தோன்றும் நிலை­மை­களை கையாள்­வ­தற்கு புதிய அரச நட­வ­டிக்­கை­யாக குறித்த சட்­டங்கள் கொண்டுவரப்படுகின்றன. நிகழ்­நிலை காப்பு சட்­டத்தை எடுத்துக் கொண்டால், அதன் 57 பிரி­வு­களில் 30 திருத்­தங்கள் காணப்படுகின்றன. இவ்­வா­றாக ஏனைய சட்­ட­மூல சட்டமூலங்களுக்கு அது முன்­மா­தி­ரி­யாக இருக்கப் போகின்­றது.

தேசியப் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் அற்ற, அமைதி நில­விய காலங்களில் கூட சட்­டங்கள் துஷ்­பி­ர­யோகம் பண்­ணப்­பட்டு வந்திருக்­கின்­றன. அவ்­வாறே, அச்­சு­றுத்­த­லற்ற காலங்­களில் கூட இந்த சட்­டத்தின் சில சரத்­துக்கள் துஷ்­பி­ர­யோகம் செய்யப்படக்கூடிய நிலை­மை­ ஏற்­ப­டலாம். அதற்­கான வர­லாற்று பின்­னணி இருந்­தி­ருக்­கி­றது.

எனது 30 ஆண்­டு­கால பாரா­ளு­மன்ற வாழ்க்­கையில் ஒவ்­வொரு அரசாங்­கங்­களின் ஆட்சி காலத்­திலும் பல்­வேறு சவால்­க­ளுக்கு நாம் முகம் கொடுக்க நேர்ந்­தி­ருக்­கின்­றது. அந்த 30 ஆண்­டு­களில் பாராளுமன்­றத்தில் போதிய பெரும்­பான்மைப் பலம் இல்­லாத நிலையில், அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் நிலை­மையை தக்­க­வைத்துக் கொள்­ளக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­களும் ஏற்­பட்­டன. எதிர்க்­கட்­சியை விட ஒரு ஆசன வித்­தி­யா­சத்தில் கூட அர­சாங்கம் முன்னெடுக்கப்பபட்டிருக்­கின்­றது.

உண்­மையில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் நில­விய சந்­தர்ப்­பத்­திலும் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறக்­கூ­டிய வாய்ப்பும் இருந்திருக்­கின்­றது.

இவ்­வா­றான சட்­ட­மூ­லங்­களை பரி­சீ­லிக்கும் போது கறை படிந்த, நச்சுத்­தன்மை வாய்ந்த பயங்­க­ர­வாத தடைச் சட்டம் (PTA) போன்றவற்றையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

பொது­மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்டம்(Public Security Ordinance), ஐ சி சி பி ஆர் (ICCPR)சட்டம், புனர்­வாழ்வு சட்டம்(Rehabilitation Bureau Bill) போன்றவற்­றையும் சுட்­டிக்­காட்டி அவர் வாதிட்டார்.

“அர­க­லய” போராட்டம் மற்றும் அதன் பின் விளை­வு­களால் ஆட்சியாளர்கள் ஆட்டம் கண்டு, அதிர்ந்து போயி­ருக்­கின்­றார்கள் என்பது இவ்வாறான சந்தர்ப்பத்தில் நன்றாகத் தெரிகிறது என்றார்.

இந்த வழக்கில், சட்டத்தரணி தர்மராஜ் தர்மஜாவின் அனுசரணையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீமுடன் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கனிஷ்ட சட்டத்தரணிகளாக ஷிபான் மஹ்றூப், ஹபீப் றிபான் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோரும் மன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

Vidivelli

No comments:

Post a Comment