யார் பின்னால கூட்டம் சேருதோ, அவன் ரொம்ப ஆபத்தானவன் : வெளியானது லால் சலாம் ட்ரெய்லர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 7, 2024

யார் பின்னால கூட்டம் சேருதோ, அவன் ரொம்ப ஆபத்தானவன் : வெளியானது லால் சலாம் ட்ரெய்லர்

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

கிரிக்கெட் கதைக் களம், ரஜினிகாந்த், கபில் தேவ் சிறப்பு தோற்றம், ஏ.ஆர்.ரகுமான் இசை என லால் சலாம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நடிகை அவந்திகா சனில்குமார் ஹீரோயினாக லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். 

கிரிக்கெட் மற்றும் கிராம வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ஆக்சனுடன் கூடிய ஜனரஞ்சகமான படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. 

மகள் இயக்கியுள்ள படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் மாஸ்ஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய அணிக்கு 1983 இல் உலகக்கோப்பை வென்று தந்த கபில் தேவ், லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

கிரிக்கெட் கதைக் களம், ரஜினிகாந்த், கபில் தேவ் சிறப்பு தோற்றம், ஏ.ஆர்.ரகுமான் இசை என லால் சலாம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (09) லால் சலாம் திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

No comments:

Post a Comment