யாழ். வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 8, 2024

யாழ். வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09) மாலை இடம்பெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்று (08) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக, நடிகர் சிவா, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாடகி சுவேதா மேனன், நகைச்சுவை நடிகர் ரெடின், விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான, பாலா, DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, மைனா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்க பலரும் விமான நிலையத்தில் கூடி இருந்து மிக பெரிய வரவேற்பை அளித்தனர்.

நுழைவுச்சீட்டுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதிகள் அனைத்தும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES- YARL EDUCATION SUPPORT FUND) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment