இலங்கையர் மற்றும் இலங்கையர் அல்லாதவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கும் நோக்கில் ‘விசிஷ்ட கௌசல்யாபிமானி’ மற்றும் ‘விசிஷ்ட ஜனரஜ அபிமானி’ ஆகிய இரண்டு புதிய விருதுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட PS/NC/ACD/95/2023 இலக்க அமைச்சரவை குறிப்பு மூலம், ‘விசிஷ்ட கௌசல்யாபிமானி’ மற்றும் ‘விசிஷ்ட ஜனரஜ அபிமானி’ ஆகிய இரண்டு புதிய விருதுகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஊடாக தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படுவதோடு, ஜனாதிபதியினால் பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்காக சிறந்த சேவை ஆற்றிய இலங்கையர் மற்றும் இலங்கையர் அல்லாதவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவதற்கான தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய விருதுகளை பெற விரும்பும் தகுதியுள்ள இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கான புதிய முறைமை ஒன்றை தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களை கொண்ட தேர்வுக் குழுவால் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெற்றவர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட திகதியில் ஜனாதிபதி தலைமையில் விருதுகள் வழங்கப்படும்.
சுதந்திர தினம், நினைவு தினம், தேசிய வீரர்கள் தினம் உட்பட விருதுகள் வழங்கப்படுவதற்கு பொருத்தமான திகதிகளை ஜனாதிபதிக்கு தீர்மானிக்க முடியும்.
மேலும், இலங்கையர் அல்லாதவர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment