ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசியத்தில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 25, 2024

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசியத்தில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை

மாணவர்களின் ஊடகத்திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் ஊடகப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட Ninnada23 போட்டித் தொடரின் முதலாம் சுற்று கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி இணையவழி (Online) மூலம் நடைபெற்றது.

இப்போட்டித் தொடரில் ஓட்டமாவடி மத்திய கல்லூரியைச் (தேசிய பாடசாலை) சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பற்றியிருந்ததுடன், இதில் இரு மாணவர்களும் முதலாம் சுற்றில் வெற்றி பெற்றிருந்ததுடன், அவர்களுக்கான இரண்டாம் சுற்றுப்போட்டி நிகழ்ச்சியானது கடந்த 2023 டிசம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் இடம்பெற்றது.

அந்த வகையில், இப்போட்டித் தொடரின் செய்தி தொகுப்பாக்கப் போட்டி நிகழ்ச்சியில் இடைநிலைப் பிரிவில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் எம்.ஜே.ஜஸா அஹமட் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

இவர் முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஜாபீர் மற்றும் ஓட்டமாவடி ஷரீஃப் அலி வித்தியாலய ஆசிரியை ஆயிஷா ஜாபீர் ஆகியோரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போட்டித் தொடரின் அறிவித்தல் நிகழ்ச்சியின் இடைநிலைப் பிரிவில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் எம்.வீ.அஹமட் அர்ஹம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான பதூர்தீன் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 2024 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொழும்பு RIT சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செய்தி தொகுப்பாக்கப் போட்டி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற மாணவர் எம்.ஜே.ஜஸா அஹமட் தங்கப்பதக்கத்தையும் அறிவிப்பு நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர் எம்.வீ.அஹமட் அர்ஹம் வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்து பாடசாலைக்கும் எமது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment