விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை 09 மணியளவில் ஆரம்பமான வாக்குமூலம் பெறும் நடவடிக்கை 9 மணித்தியாலங்களை கடந்த நிலையில், அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment