இலங்கையின் கிரிக்கெட் தடை நீக்கம் : ICC அறிவித்துள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 28, 2024

இலங்கையின் கிரிக்கெட் தடை நீக்கம் : ICC அறிவித்துள்ளது

உடன் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை மீது விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) நீக்கியுள்ளதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது X (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோபூர்வ ஊடக வெளியீடு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை கடந்த வருடம் நவம்பர் 10ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்திருந்தது.

ICC சபையானது, அதன் உறுப்பினர் எனும் வகையில் தனது பொறுப்புகளை இலங்கை கிரிக்கெட் மீறுவதாக தெரிவித்து இத்தீர்மானித்தை எடுத்துள்ளதாக அறிவித்திருந்தது.

சுயாதீன நிர்வாகம், கட்டுப்பாடு, ஒழுங்குமுறை ஆகிய அதன் விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தூரமாக்கப்பட்டுளதால், இந்த இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைநிறுத்தி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவொன்றை நியமித்ததைத் தொடர்ந்து, ICC குறித்த நடவடிக்கையை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் தற்போது குறித்த நடவடிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment