பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் கட்சியொன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, January 22, 2024

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் கட்சியொன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் பலி

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழு ஒன்று வெள்ளை டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment