பாடசாலைகளில் விழாக்களை நடத்த கட்டுப்பாடு : வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 21, 2024

பாடசாலைகளில் விழாக்களை நடத்த கட்டுப்பாடு : வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு மத்திய மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறுகையில், மத்திய மாகாண சபைக்கு உரித்தான பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்து, சில பாடசாலைகள் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதனால் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்துக்கு அமைய முதலாவது தவணையில் 3 விழாக்களுக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் 4 விழாக்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன் இதற்கு மேலதிகமாக ஏதாவது ஒரு விழா நடத்துவதாக இருந்தால் அது தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

முதலாம் தவணையில் புதிய பிள்ளைகளை அனுமதிக்கும் விழா, சுதந்திர தின விழா மற்றும் இல்ல விளையாட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளின்போது கல்விச் சுற்றுலா, கலைவிழாக்கள், வர்ண நிகழ்வுகள் மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இசைக் கச்சேரி, ஆசிரிய கெளரவிப்பு உள்ளிட்ட பல்வேறு விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களினால் வரையறை இன்றி பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சுற்றுநிருபம் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment