கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பூதகரமாகும் தாடி விவகாரம் : மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டுமொரு வழக்குத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, December 15, 2023

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பூதகரமாகும் தாடி விவகாரம் : மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டுமொரு வழக்குத் தாக்கல்

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாதியர் கற்கை நெறியில் பயிலும் மாணவன் நுஸைப் தாடி வைத்திருந்தமைக்காக விரிவுரைகளுக்கு செல்வதில் இருந்து தடுக்கப்பட்டும் பரீட்சை எழுதுவதற்குத் தடுக்கப்பட்டுமிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் இரண்டு விரிவுரையாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

அந்த விடயத்தில் குரல்கள் இயக்கம் முற்று முழுதாக களத்தில் இறங்கி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு ஆணையிட்டிருந்தது.

அந்தப் பிரச்சினை முடிந்த கையோடு மீண்டும் ஒரு தாடிப் பிரச்சினையை பல்கலைக்கழக நிர்வாகம் தூக்கியிருக்கியிருக்கிறது. 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஸஹ்றி மருத்துவ பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கிறார். அனைத்துப் பாடங்களிலும் உயர் சித்தி பெறும் மாணவன் சஹ்றி. 

மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள் Psychiatry, Obstetrics and Gynaecology, Medicine,Surgery and Paediatrics போன்ற இறுதி ஆண்டு பாடங்களுக்கு வைத்தியாசாலைக்குச் சென்று ஒரு பேராசியரின் கீழ் வைத்தியசாலை, நோயாளர்கள் போன்ற விடயங்களைக் கற்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Clinical Clarkship என்பார்கள்.

அவ்வாறு Obstetrics and Gynaecology என்ற பாடத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு சென்ற மாணவன் ஸஹ்றியை அந்தப் பாடத்திற்கு பொறுப்பான பேராசியர் மணிகண்டு திருக்குமார் மற்றும் பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் தாடியை மழித்துவிட்டு வராவிட்டால் அனுமதிக்க முடியாது எனக்கூறி மாணவர் ஸஹ்றியை சுமார் 5 நாட்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். ஸஹ்றி இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறிப்பிட்ட பாடத்திற்கு வைத்தியசாலையில் நடைபெறும் கற்கைக்கு செல்லாவிட்டால் மாணவன் ஸஹ்றி இந்த வருடப்பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டு இந்த ஆண்டை இழக்க வேண்டிவரும். பாதிக்கப்பட்ட மாணவன் குரல்கள் இயக்கத்தை நாடி இருந்தார். 

இன்றோடு நீதிமன்றங்களுக்கு விடுமுறை ஆரம்பிக்கின்றன. இன்று சஹ்றிக்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்காவிட்டால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு ஸஹ்றி தனது படிப்பை இழந்து விடுவார். மூன்று நாட்களாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் துரிதமாக இரவு பகல் பாராது வேலை செய்து நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. முடிவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீங்களும் பிரார்த்தியுங்கள். இன்று ஜும்மாவிற்கு பின்னர் அதற்கான நீதி மன்றக் கட்டளை வரலாம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது மனித உரிமை மீறல். ஏற்கனவே இடைக்காலத்தடை உத்தரவு ஒன்று அமுலில் இருக்கும்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் இரண்டாவது முறையாக தாடி விவகாரத்தில் இப்படி நடந்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment