E-BILL ஐ பதிவு செய்யுமாறு மின்சார சபை வேண்டுகோள் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 14, 2023

E-BILL ஐ பதிவு செய்யுமாறு மின்சார சபை வேண்டுகோள் !

மின்சாரக் கட்டணப்பட்டியல் சேவைக்கு E-BILL ஐ பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ebill.ceb.lk இணையதளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறின்றேல் 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் இந்த இ-மின் கட்டணச் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<blank> மின்சாரக் கணக்கு எண் <blank> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம் என்றும் மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment