மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்த கணவன் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்த கணவன்

தனது மனைவியை அடித்துக் கொலை செய்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று, அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (04) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு நீண்டு சென்றதில், மனைவியை தேங்காய் துருவியால் தலையில் தாக்கியதில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக, அலுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான மனைவியும் 36 வயதான அவரது கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment