வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கிய இளைஞனின் சடலம் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கிய இளைஞனின் சடலம் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அடையாளம்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலமொன்று வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 28 வயதான, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனன் உடலில் சிவப்பு தழும்புகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment