காசா எல்லையில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

காசா எல்லையில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக, காசா பகுதியில் இருந்து எகிப்து வந்தடைந்த 11 இலங்கையர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காசாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 03ஆம் திகதி எகிப்துக்கு வந்தடைந்ததாக பலஸ்தீனில் உள்ள இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்துக்கு வந்த அவர்கள், ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக, அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்தார்.

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் ரஃபா எல்லை ஊடாக வரவிருந்த நிலையில், அவர்களில் நால்வர் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment