தெதுரு ஓயா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, November 4, 2023

தெதுரு ஓயா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம் !

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த் தேக்கம் மீண்டும் நிரம்பி வழிந்த நிலையில், இன்று சனிக்கிழமை (04) அதிகாலையில் நீர்த் தேக்கத்தின் 5 வான் கதவுகளும் 4 அடியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்த் தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார்.

இதனால் நீர்த் தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவுக்கு வினாடிக்கு 13,800 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு தெதுரு ஓயா ஆற்றுக்கு நீர் திறந்துவிடப்படுவதால், அதன் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படாது. எனினும், எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment