சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (9) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 21 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து சுகாதார அமைச்சு வரை பேரணியாக செல்லும் வகையில் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் இப்போராட்டத்தில் மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணியை ஆரம்பிக்க முயன்றபோது பொலிஸார் அதற்கு இடையூறு விளைவித்தனர்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் சிலருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுப்பட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
No comments:
Post a Comment