(எச்.எம்.எம்.பர்ஸான்)
பலஸ்தீன் - காஸா பகுதியில் இஸ்ரேல் நடாத்தும் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து இன்று (3) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் மாபெரும் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை மற்றும் பள்ளிவாசல்கள், சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த கண்டனப் பேரணியை முன்னெடுத்தது.
காஸா பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் எனப்பலரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நிறுத்தக் கோரி, இஸ்ரேலை கண்டித்து ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, காவத்தமுனை, மாவடிச்சேனை, பிறைந்துறைச்சேனை உட்பட பல பகுதிகளிலுமுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் ஓட்டமாவடி சுற்றுவட்டத்தில் ஒன்று திரண்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
யுத்தத்தை நிறுத்தக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடைய ஓட்டமாவடி உதவிப் பிரதேச செயலாளர் அல் அமீனிடம் கல்குடா ஜம்இய்யது உலமா பிரதி நிதிகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
No comments:
Post a Comment