நாளை நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 70 முதல் 90 ரூபாவுக்குள் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள், 12.5 கி.கி. ரூ. 3,779 இற்கும் 5 கி.கி. 1,579 இற்கும் 2.3 கி.கி. ரூ. 798 இற்கும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியாக தற்போது நிலவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்
No comments:
Post a Comment