உயிரிழந்த மற்றுமொரு இலங்கையரின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 8, 2023

உயிரிழந்த மற்றுமொரு இலங்கையரின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது !

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் இன்று வியாழக்கிழமை (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து துபாய் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை 08.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுஜித் யடவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி மற்றும் பலர் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அவரது மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment