நாட்டில் நீரிழிவு நோயால் 14.6 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வெவ்வேறு வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட போதிலும், அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 ஆகிய நீரிழிவு நோய்களுக்கு தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோய் தொடர்பில் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது இதயம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றின் பாதிப்புக்களை குறைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment