சாரதியை போதையாக்கி வாடகை காரை தூக்கிய சந்தேகநபர்கள் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

சாரதியை போதையாக்கி வாடகை காரை தூக்கிய சந்தேகநபர்கள் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

வாடகைக்கு பெற்ற வெகன் ஆர் ரக கார் ஒன்றை சூட்சுமமாக கடத்திச் சென்றமை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்கள் கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி கடவத்தை அதிவேக வீதியின் நுழைவாயிலிலிருந்து புளத்சிங்கள நோக்கி செல்வதற்காக வாடகைக்கு பெற்ற குறித்த காரை, புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவரஹேன பகுதிக்குச் சென்று, சாரதி போதையாவதற்காக பானம் ஒன்றை வழங்கி, காரை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார், CCTV காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கொள்ளையுடன் தொடர்பான சந்தேக நபரின் வரையப்பட்ட ஓவியத்தை வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிப்பாளர்/ கொழும்பு குற்றப் பிரிவு - 0718591733

நிலைய பொறுப்பதிகாரி/ கொழும்பு குற்றப் பிரிவு - 0718591735

நிலைய பொறுப்பதிகாரி/ ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு - 0718596510

No comments:

Post a Comment