கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை சுங்கத்திற்கு கிடைத்த வருமானம் 109 பில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
இது சுங்கத் திணைக்களம் இதுவரை ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய வருமானம் என சுங்கப் ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
வரி அறவிடும் செயன்முறையை முறையாக, செயற்றிறனுடன் மேற்கொண்டமையானது, இவ்வாறு வருமானம் அதிகரிக்க பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடத்தில் ஒக்டோபர் 31 வரை, சுங்கத் திணைக்களத்தின் மொத்த வருமானம் ரூ. 760 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தில் மொத்த சுங்க வருமானம் ரூ. 925 பில்லியனை கடக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment