பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 1, 2023

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .

நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் .

இதனையடுத்து முறையே நவம்பர் 03, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர் .

நவம்பர் 08 ஆம் திகதி, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர் .

நவம்பர் 09 ஆம் திகதி தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகளும், நவம்பர் 10 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தின் மருத்துவ அதிகாரிகளும் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment