நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 485 எயிட்ஸ் நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் மரணித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 41 இடங்களில் எயிட்ஸ் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், புதிய நோயாளர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 5,496 எயிட்ஸ் நோயாளர் உள்ளனர். அவர்களில் 4,095 ஆண்களும் 1,391 பெண்களும் அடங்குகின்றனர்.
கடந்த வருடம் 607 நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் ஒப்பிடும்போது 2022 இல் பதிவான நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று காலப்பகுதியில் எயிட்ஸ் பரிசோதனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமென, தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எயிட்ஸ் பரிசோதனைக்கு விரும்பும் எவரும் www.know4sure.lk என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் நிகழ்நிலை சந்திப்புகளை மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் மேலதிக தகவல்களுக்கு 0112 667 163, 0703 633 533 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment