நாடு கடத்தப்பட்ட 31 இலங்கையர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 2, 2023

நாடு கடத்தப்பட்ட 31 இலங்கையர்கள்

சுற்றுலா விசாவில் சென்று ஜோர்தானில் பணியாற்றிய 31 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்.

ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானின் பொதுப் பாதுகாப்பு பணியகத்துடன் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த ஜூலை 22 இல், வேலை வாய்ப்புகளை தேடும் எதிர்பார்ப்புடன் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில்,ஜோர்தான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒ க்டோபர் 12 இல், இவர்கள் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் வருகை / சுற்றுலா விசாவில் அதிக காலம் தங்கியிருப்பது அல்லது சட்டவிரோதமாக சர்வதேச எல்லைகளை கடக்க முயற்சிப்பது உள்ளிட்டவை கடந்த காலங்களில் தொடர்ந்தும் அங்கு இடம்பெற்று வந்துள்ளன.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, ஜோர்தானில் சிக்கி தவிக்கும் 120 இலங்கையரை மீள அழைப்பதில் இலங்கைத் தூதரகம் ஈடுபட்டது.

அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கையருக்கு மருத்துவ உதவி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் ஜோர்தானிய அதிகாரிகளால் வழங்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்தது.

இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் தேவையான வீசா இல்லாமல் விசிட் வீசா /டூரிஸ்ட் விசாவில் இலங்கையர் ஜோர்தானுக்கு வர வேண்டாமென இலங்கை தூதரகம் மேலும் அறிவுறுத்தியது.

இலங்கையைச் சேர்ந்த பல ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து ஆட் கடத்தலுக்கு பலியாகி, பின்னர் நாடு கடத்தப்படுவதாக தூதரகம் தெரிவித்தது.

ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகம் அனைத்து இலங்கையரையும் சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறுமாறும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment