வனவிலங்குகளினால் எற்படும் பாதிப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக கண்காணிப்பின் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குரங்கு, பன்றி, யானை உட்பட மிருகங்கள் விவசாய பயிர்ச் செய்கைகள் மற்றும் பழ வகைகள் ஆகியவற்றுக்கு சேதம் விளைவிப்பதால் வருடாந்தம் 17 முதல் 20 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பின்போதே இந்தத் தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வருடாந்தம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் 31,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமானளவு இவ்வாறு வன விலங்குகளினால் அழிக்கப்படுவதாகவும் அந்த பாதிப்புகளை தடுக்கும் வகையில் இதுவரை மேற்கொண்டுள்ள அனைத்து முறைமைகளும் சாத்தியமற்றுப் போயுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தள்ளார்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு மாத்திரம் குரங்குகளால் 200 மில்லியன் தேங்காய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment