நிதித்துறை பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கை நிதித்துறை பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிறைவேற்றுச் சபையினால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக வங்கி இன்றையதினம் (09) பின்வரும் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளதாக, இலங்கை மத்திய விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தை மையமாகக் கொண்டு, இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு மற்றும் நிதி நிறுவனத்திறனை வலுப்படுத்தும் வகையில் குறித்த நிதியை விடுவிக்க உலக வங்கி உடன்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment