மீட்டியாகொட பொலிஸ் பிரவிற்குட்பட்ட மஹவத்த வீதி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் சந்தேகநபர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (09) ரத்கம பொலிஸ் பிரவில் பொலிஸ் பரிசோதகர் பாலேந்திர என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த தகவலுக்கமைய, அங்கு சோதனையிடச் சென்ற வேளையில், சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 42 வயதான, வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, எல்பிட்டி – மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ii நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment