தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதூவ மற்றும் இமதூவ இடைமாற்ற (101km - 102km) பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. மழையுடனான வானிலை காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதூவ இடைமாற்றலில் வெளியேற வேண்டியுள்ளதோடு, மீண்டும் இமதூவ இடைமாற்றல் ஊடாக மாத்தறை நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் இமதூவ இடைமாற்றலில் வெளியேற வேண்டியுள்ளதோடு, மீண்டும் பின்னதூவ இடைமாற்றல் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment