பதவி இழந்தார் நஸீர் அஹமட் : வெற்றிடமாகியுள்ளதாக அறிவித்தார் பாராளுமன்ற செயலாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 10, 2023

பதவி இழந்தார் நஸீர் அஹமட் : வெற்றிடமாகியுள்ளதாக அறிவித்தார் பாராளுமன்ற செயலாளர் நாயகம்

முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதனால் வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் அடுத்த வேட்பாளர் தேர்தல் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட உள்ளார்.

உயர் நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பை அடுத்து சுற்றாடல்த்துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் பதவி இழந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ஏ. ரோஹனதீர உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று (09) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

நஸீர் அஹமட்டுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இடம்பெற்றுள்ளார்.

அதன்படி புதிய பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என கடந்த 6ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment