தொடர் மழையால் நோய்கள் பரவல் : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, October 23, 2023

தொடர் மழையால் நோய்கள் பரவல் : சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்க வழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment