ஷம்மி சில்வா கோரிய இடைக்கால தடை உத்தரவு மனு நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 23, 2023

ஷம்மி சில்வா கோரிய இடைக்கால தடை உத்தரவு மனு நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மீது கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க மேற்கொண்டதாக கூறப்படும் அவதூறு தொடர்பில் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்த வழக்கில், இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்ட மனு கொழும்பு மாவட்ட நீதிபதியினால் நேற்று (23) நிராகரிக்கப்பட்டது.

மனுதாரரான ஷம்மி சில்வா சார்பில் சட்டத்தரணி சஞ்சே பொன்சேகாவின் சட்ட ஆலோசனையுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சில்வா மற்றும் சட்டத்தரணி பசிந்து பண்டார ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகினர்.

பிரதிவாதியான அர்ஜுன ரணதுங்க சார்பாக சட்டத்தரணி நிரோஷா ஹேரத்கே ஆலோசனை அடிப்படையில் அமா கருணாரத்ன, சத்துசலா ஜயசிங்க மற்றும் பிரசாத் சிறிமான்ன ஆகிய சட்டத்தரணிகளுடன் சிரேஷ்ட சட்டத்தரணி பண்டார ஹேரத் ஆஜராகியிருந்தார்.

இந்த அவதூறு தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஷம்மி சில்வா 2021 மே மாதம் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடம் ஆறு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தொடுத்திருந்தார்.

ஷம்மி சில்வாவுக்கு எதிராக வீடியோ மூலம் அர்ஜுன் ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு எதிராகவே, இவ்வழக்கு தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment