சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை : ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, October 30, 2023

சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை : ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

சரத்பொன்சேகா, கட்சியின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கட்சி உறுப்பினர்கள், பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள போதும், அவர் யாருடைய பேச்சையும் கேட்டதாக தெரியவில்லை. இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க இருப்பதாக மத்தும பண்டார கூறினார்.

No comments:

Post a Comment