டீசல் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்காது - News View

About Us

About Us

Breaking

Monday, October 2, 2023

டீசல் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்காது

டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால் டீசலின் விலை 4 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது டீசலின் விலை 2 வீதத்தால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது, பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போதுமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் டீசலின் விலை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு அதிகரிக்குமானால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment