பலஸ்தீன அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் போருக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பு 5,000 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், இஸ்ரேல் பதிலுக்கு காசா கரைப் பகுதியில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் அபய தலங்களுக்கு அருகில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, 70 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், செக் குடியரசு, ஜேர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment